snapdeal

Monday, December 5, 2016

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானார்

சென்னை,

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு   “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு  ஏற்கனவே சிகிச்சை அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ்  டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு  பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

டாக்டர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிர்காக்கும் கருவிகள் மூலம்  அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானார்

News source :dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD