snapdeal

Monday, December 5, 2016

தீவிர மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஜெ.,

தீவிர மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஜெ.,





சென்னை: சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
செயற்கை சுவாசம்



மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இதய, சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய செயல்பாட்டிற்காக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சீராக செயல்பட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர், மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மருத்துவ குழுவினர் சென்னை விரைந்து கொண்டுள்ளனர். இருப்பினும், அவருடைய உடல்நிலை குறித்து காலை 3 மணிக்கு பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு திரும்பும் அமைச்சர்கள்



முதல்வர் உடல்நிலை காரணமாக தமிழக அமைச்சர்கள் அனைவரும் சென்னை திரும்பி கொண்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்பல்லோவில் குவியும் தொண்டர்கள்



முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் நேற்று மாலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர்


No comments:

Post a Comment

FREE DOWNLOAD