snapdeal

Wednesday, December 14, 2016

நாளை நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது - நிதி அமைச்சகம்||Old-Rs-500-notes-not-acceptable-from-Dec-15-midnight

நாளை நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது - நிதி அமைச்சகம்||Old-Rs-500-notes-not-acceptable-from-Dec-15-midnight






புதுடெல்லி,

நாளை நள்ளிரவு வரையில் மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய 500 ரூபாய் நோட்டுகளை அரசு சேவை கட்டணங்கள் (மின்சார கட்டணம் போன்ற கட்டணங்கள்) அல்லது மருந்து பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்த முடியும், 15-ம் தேதிக்கு பின்னர் சலுகையை நீட்டிக்ககூடாது என்ற மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.

பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொன்டு  இனி மொபைல் கட்டணமும் செய்ய முடியாது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளை முன்னர் அறிவித்ததை போன்று வங்கி கணக்கில் செலுத்திக் கொள்ளலாம். பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “பழையை 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வழங்கப்பட்ட விலக்கானது டிசம்பர் 15-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது,” என்று தெரிவித்து உள்ளது. 

மருந்து கடைகளில் இனி பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது. மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் போன்ற கட்டணங்களை அரசுக்கு செலுத்த இதுவரையில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 15-ம் தேதிக்கு பின்னர் 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி இதுபோன்ற கட்டணங்களை செலுத்த முடியாது. மத்திய அரசு ஏற்கனவே, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விமான டிக்கெட்கள் மற்றும் ரெயில் டிக்கெட்கள் வாங்குவதற்கு வழங்கிய விலக்கை திரும்ப பெற்றுக் கொண்டது. பெட்ரோல் பங்குகள் மற்றும் சுங்கசாவடிகளிலும் வழங்கப்பட்ட விலக்கும் திரும்ப பெறப்பட்டது.

நவம்பர் மாதம் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு இந்த நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள  72 மணி நேரங்களுக்கு விலக்கு அளித்தது. பின்னர் டிசம்பர் 15-ம் தேதி வரையில் விலக்கை அதிகரித்தது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை அறிவிப்பை அடுத்து மத்திய அரசு டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை கொண்டுவர பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது. 
ரொக்கம் இல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் மின்னணு முறையை பயன்படுத்தி பெட்ரோல், டீசல், ரெயில் டிக்கெட் வாங்குவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்சூரன்ஸ், சுங்கச்சாவடி கட்டணத்திலும் தள்ளுபடி கிடைக்கும். ரூ.2 ஆயிரம் வரையிலான பண பரிமாற்றத்துக்கு சேவை வரி கிடையாது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD