snapdeal

Tuesday, December 13, 2016

சென்னை புறநகர் பகுதிகளில் ‘வார்தா’ புயல் பாதிப்பு வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள்||Chennai-suburban-areasWardha-Storm-Damage--Inactive

சென்னை புறநகர் பகுதிகளில் ‘வார்தா’ புயல் பாதிப்பு வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள்||Chennai-suburban-areasWardha-Storm-Damage--Inactive




ஆவடி

சென்னை புறநகர் பகுதிகளில் ‘வார்தா’ புயல் காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.

மின்கம்பங்கள் விழுந்தது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பாடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் வார்தா புயல் காரணமாக பலத்த காற்று வீசியதுடன் தொடர்ந்து கன மழை கொட்டியது.

இதனால் அந்த பகுதிகளில் அதிகாலை முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருநின்றவூர், சுதேசி நகர் பகுதியில் சாலையில் மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததுடன், மின்சார வயர்கள் அறுந்து கீழே விழுந்தன.

மழைநீர் தேங்கியது

இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

புயல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அலுவலகத்திற்கு செல்லவில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியவில்லை. வீடுகளிலேயே முடங்கிக்கிடந்தனர்.

மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் சேதம்

ஆலந்தூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கள் சேதம் அடைந்தன.

மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் சாலைகளில் கிடந்த மரங்களை அகற்றினார்கள்.

நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். கடற்கரையோரங்களில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்கள். 



No comments:

Post a Comment

FREE DOWNLOAD