snapdeal

Sunday, November 20, 2016

500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்: வேலைப்பளு காரணமாக எஸ்பிஐ மானேஜர் வங்கியில் உயிரிழப்பு||Demonetisation-effect-SBI-manager-dies-in-bank-due

500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்: வேலைப்பளு காரணமாக எஸ்பிஐ மானேஜர் வங்கியில் உயிரிழப்பு||Demonetisation-effect-SBI-manager-dies-in-bank-due

நெல்லூர்,


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து வங்கியில் ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக எஸ்பிஐ வங்கி மானேஜர் வங்கியில் உயிரிழந்து உள்ளார். 

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதனால் வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது. வங்கிகள் கூடுதல் நேரம் செயல்பட்டு வருகிறது. 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றும் விவகாரத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள் உள்ளாகி உள்ளனர். இதனால் பொதுமக்களும், வங்கி ஊழியர்களும் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் பணியில் இருந்த உதவி மானேஜர் உயிரிழந்து உள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் எஸ்பிஐ கிளையில் உதவி மானேஜராக பணிபுரிந்து வந்தார் எஸ்கே செரீப் (வயது 46). 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து வங்கியில் நீண்ட நேரம் பணிபுரிந்து வந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

வங்கியில் பணிபுரிந்த போது திடீரென மயங்கி விழுந்தார், இதனையடுத்து உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 
செரீப்பின் தந்தை ஜாகீர் பேசுகையில், என்னுடைய மகன் அதிகமாக வேலைப்பளு இருப்பதாகவும், மன அழுத்தமாக இருக்கிறது என்றும் கூறினான். ”கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக என்னுடைய மகன் மற்றும் பிற பணியாளர்களை பொதுமக்கள் வங்கிக்குள் வைத்து பூட்டிவிட்டனர், பணம் இல்லாத காரணத்தினால். 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து என்னுடைய மகன் காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரையில் பணிபுரிந்து வந்தான், என்று கூறிஉள்ளார். செரீப்பிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD