snapdeal

Saturday, July 2, 2016

சுவாதி கொலை... நுங்கம்பாக்கம் முதல் மீனாட்சிபுரம் வரை நடந்தது என்ன போலீசார் முழு அறிக்கை .

சுவாதி கொலை செய்யப் பட்டதும் குற்றவாளியை பிடிக்க போலீஸ்படை முழு வீச்சில் களம் இறக்கப்பட்டது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை நடந்த இடத்துக்கு சென்று போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் சென்று ஆய்வு செய்தனர். பொதுவாக கொலை நடந்தால் பதட்டத்தில் கொலையாளி தப்பிச் செல்லும் போது ஏதாவது தடயத்தை விட்டுச் செல்வான். ஆனால் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் எந்த தடயமும் சிக்கவில்லை. அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் கொலையாளி உருவமும் சிக்கவில்லை. அருகில் உள்ள வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா படமும் கொலையாளி வீசிச்சென்ற அரிவாளும் மட்டுமே கிடைத்தது. வழக்கமாக இதுபோன்ற  சம்பவங்களில் செல்போன் கள்தான் போலீசுக்கு மிக வும் கைகொடுக்கும். ஆனால் இங்கு சுவாதியின் செல் போனும் கிடைக்கவில்லை. கொலையாளியின் செல் போனும் கிடைக்கவில்லை. இதனால் துப்பு துலக்குவது போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. முந்தைய காலங்களில் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள் மூலம் அவன் பழைய குற்றவாளியாக இருந்தால் அவனது ரெக்கார்டு சம்பந் தப்பட்ட போலீஸ் நிலையத் தில் இருக்கும். அதை வைத்து போலீசார் பிடித்து விடுவார்கள். மேலும் கொலையாளி உருவத்தை படம் வரைந்து தேடுவார்கள். உள்ளூர் கொலையாளி என்றால் உடனே பிடிபடு வான். ஆனால் சுவாதி கொலையாளியோ படித்த கிராமத்தானாக இருந்திருக் கிறான். எனவே தான் போலீ சுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் தனிப்படை போலீசார் கொஞ்சமும் சளைக்கவில்லை. தங்களுக்கு கிடைத்த கொலையாளியின் தெளி வில்லாத வீடியோ படத்தை ஐதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி அதை மிக துல்லியமானதாக மாற்றி வெளியிட்டனர். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கொலையாளி பற்றி ஏதாவது ‘க்ளூ’ கிடைக்குமா என்று ஒரு பக்கம் ஆய்வு செய்தனர். இதற்காக அமெரிக்காவில் உள்ள ‘வாட்ஸ் அப்’ நிறுவ னத்துடன் தொடர்பு கொண் டனர். ‘வாட்ஸ் அப்’ நிறுவன மும் உதவ முன் வந்தது. இதற்காக சுவாதியின் டூப்ளி கேட் சிம்கார்டு பெறப்பட்டது. இதன் மூலம் அவரது எண்ணுக்கு யார்- யார் பேசி இருக்கிறார்கள் என்று எண்களை திரட்டி னர். இதில் கிடைத்த லட்சக் கணக்கான எண்களில் அதிக முறை பேசிய எண்களை சேகரித்த போது அதில் குறிப்பிட்ட சில எண் மட்டும் சூளைமேடு பகுதியில் இருந்து சுவாதி எண்ணுக்கு வந்தது. எனவே கொலையாளி சூளைமேடு பகுதியைச் சேர்ந் தவன் என்ற உறுதியான முடிவுக்கு வந்தனர். இதனால் தனிப்படையின் கவனம் சூளைமேடு பக்கம் திரும்பியது. இதையடுத்து கொலையாளியின் தெளி வான படத்தை தனிப்படை போலீசார் ஏராளமான பிரதிகள் எடுத்து சூளைமேடு பகுதியில் விநியோகித்தனர். போலீசார் வீடு வீடாகச் சென்றும் கொலையாளி படத்தை காட்டி ‘‘படத்தில் உள்ள நபரை பார்த்திருக்கிறீர்களா?’’ என்று விசாரித் தனர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கொலையாளி உருவத்தையொடிய வாலிபர் சூளைமேடு பகுதி யில் சுவாதியின் வீடு அருகே உள்ள ஒரு மேன்சனில் தான் தங்கி இருந்துள்ளார். அந்த மேன்சனின் காவலாளியிடம் போலீசார் போட்டோவை காட்டிய போது ‘‘இந்த வாலிபர் இங்கு தான் தங்கி இருந்தார்’’ என்ற தகவலை தெரிவித்தார். இதனால் உஷாரான போலீசார் அந்த மேன்சனை தங்கள் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வந்து கொலையாளி யார்? இப்போது எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விவரத்தை சேகரித்து விட்டனர். இதுவே கொலையாளியை பிடிக்க பெரிதும் உதவியாக இருந்தது. இதில் தனிப்படை போலீ சாரின் அயராத உழைப்பு பாராட்டத்தக்கது. இரவு- பகலாக கண் விழித்து துப்பு துலக்கினார்கள். சுவாதி கொலையாளியை பிடிக்க தலா 10 போலீசார் அடங்கிய 11 தனிப்படைகள் அமைக்கப் பட்டது. மொத்தம் 110 போலீசாரின் திறமையான உழைப்பால் இந்த வெற்றி கிடைத்தது. எந்தவித துப்பும் கிடைக் காமல் நவீன யுத்தியை கையாண்டு 8 நாட்களில் கொலையாளியை பிடித்து போலீசார் மக்களிடம் சபாஷ் பெற்று விட்டனர். தனிப்படையைச் சேர்ந்த 110 போலீசாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சுவாதி கொலை நடந்ததும் உடனே கொலையாளியை பிடிக்காதது ஏன் என்று போலீஸ் மீது ஏகப்பட்ட விமர்சனங் கள், கண்டனங்கள் அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் அம்பு போல் வந்து தாக்கின. ஆனால் போலீசார் அவற்றை எல்லாம் பொருட் படுத்தாமல் கொலை யாளியை பிடிப்பதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் தனிப் படை போலீசாருக்கு அவ்வப் போது ஊக்கம் அளித்ததுடன் ஆலோசனைகளும் வழங்கி னர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுவாதி கொலை எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. கொலை நடந்த விதம் போன்றவற்றையெல்லாம் பார்க்காமல் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறினார்கள். இது போலீ சாரின் உற்சாகத்தை இழப்ப தாக இருக்கக் கூடாது, கொலையாளி என்று யாரையும் முடிவு கட்டிவிட முடியாது. சரியான ஆதா ரங்கள் இருந்தால்தான் பிடிக்க முடியும். ரோட்டில் போவோரையெல்லாம் விசாரிக்க முடியாது. மனித உரிமை கமிஷன், நீதித்துறை கண்டனத்துக்கு ஆளாகி விடுவோம். எனவே தான் குற்றவாளியை தப்ப விடாமல் அவனது கவனத்தை திசை திருப்பித்தான் பிடிப் போம். எனவே கொலை யாளி விஷயத்தில் அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. அவ்வப் போது கிடைக்கும் தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பாதுகாக்க வேண்டியதும் உள்ளது’’ என்று கூறினார். ‘‘சிக்கலான வழக்குகளில் துப்புதுலக்குவதில் தமிழ்நாடு போலீஸ் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானது என்ற பெயர் உண்டு. அந்தப் பெயரை மீண்டும் தக்க வைத்துக் கொண்ட தமிழ் நாடு போலீசுக்கு மீண்டும் ஒரு சபாஷ். சுவாதி கொலையில் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: மென்பொருள் பொறியாளர் சுவாதி என்பவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராம்குமார் என்பவர் தனிப்படையினரால் திருநெல்வேலியில் பிடிப்பட்டார் கடந்த 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சுவாதி (24) த/பெ. சந்தான கோபாலகிருஷ்ணன், சூளைமேடு என்பவர் மின்சார ரயிலுக்கு காத்திருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திரு. இரகுபதி (55), கமர்சியல் மேற்பார்வையாளர், நுங்கம் பாக்கம் புக்கிங் ஆபிஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்புப்பாதை காவல்துறையினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கின் புலன் விசாரணையானது கடந்த 27.6.2016 அன்று சென்னை பெருநகர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையை துரிதமாக செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. டி.கே. இராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) திரு. சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் இணை ஆணையாளர்கள் திரு. மனோகரன், இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திரு. அன்பு, இ.கா.ப., (தெற்கு மண்டலம்) ஆகியோருடன், திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு. பெருமாள், தியாகராயா நகர் துணை ஆணையாளர் திரு. சரவணன், கூடுதல் துணை காவல் ஆணையாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப் பிரிவு, மூன்று உதவி ஆணையாளர்கள் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளர் கே.பி.எஸ். தேவராஜ் என்பவர் இவ்வழக்கின் முதன்மை புலன் விசாரணை அதிகாரி ஆவார். இவ்வழக்கில் தனிப்படையினர் சூளைமேடு பகுதியிலும், சுவாதி பணிபுரிந்த மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியிலும் மற்றும் பரனூரிலும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இறந்துபோன சுவாதியின் நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, ரயில் நிலையத்திலிருந்து குற்றவாளி தப்பிச்சென்ற வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் 5 இடங்களில் சேகரிக்கப்பட்டு சம்பவத்தை பார்த்த நேரடி சாட்சிகளிடமும் விசாரணை செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. தனிப்டையினர் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு மற்றும் மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சைபர் குற்றப் பிரிவினரும் பயன்படுத்தப்பட்டனர். தனிப்படையினர் சூளைமேடு பகுதியில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு கேமாரா பதிவில் இருந்த புகைப்படத்தைக் காட்டி விசாரணை செய்தனர். மேலும் சௌராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எஸ் மேன்சனில் சந்தேக நபரின் புகைப்படத்தைக் காட்டி விசாரணை செய்ததில் அந்த விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உள்ள புகைப்படமும் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படமும் ஒத்துப்போனது. மேலும் விசாரணை செய்தபோது அந்த நபரின் பெயர் ராம்குமார் என்பதும், அவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள டி.மீனாட்சிபுரம் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் இச்சம்பவத்திற்கு பிறகு தலைமறைவானதும் தெரியவந்தது. காலத்தின் அருமைக் கருதி, 1.7.2016 அன்று இரவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரை தனிப்டையினர் தொடர்பு கொண்டு ராம்குமாரின் இருப்பிட முகவரியை விசாரிக்க ஒரு தனிப்படையினரை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பேரில் திருநெல்வேலி காவல்துறையினரின் தனிப்படையினர் டி.மீனாட்சிபுரம் சென்று ராம்குமாரின் வீட்டினை சோதனையிட, அவர் வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்துள்ளார். காவல்துறையினர் வருவதைக் கண்டு, அவர்களை பயமுறுத்தும் வகையில் தன்னிடம் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இன்று (2.7.2016) மேற்படி ராம்குமாரை சென்னை பெருநகர காவல்துறையினர் காவலில் வைத்து புலன் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். முதற்கட்ட புலன் விசாரணையில் ராம்குமார் (24) த/பெ. பரமசிவம் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைத்தேடி சென்னை வந்துள்ளார். சென்னையில் அவர் சூளைமேடு சௌராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எஸ் மேன்சனில் அறை எடுத்து வாடகைக்கு தங்கியிருந்துள்ளார். இறந்த சுவாதியின் வீடும் சூளைமேடு பகுதியில் உள்ளது. சுவாதி மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து செங்கல்பட்டு அருகில் உள்ள மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பிரிவில் பணிபுரிந்து வந்தார். சுவாதி தினசரி பணிக்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலிலில் சென்று வந்துள்ளார். இதனையறிந்த ராம்குமார் அடிக்கடி அவரை பின்தொடர்ந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த சுவாதியை தாக்கி கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. புலன் விசாரணையில் தனிப்படையினர், ராம்குமார் சுவாதியை பின் தொடர்ந்ததற்கான ஆதாரங்களையும் மற்றும் தடயங்களையும் கைப்பற்றியுள்ளனர். ராம்குமார் சுவாதியை கொலை செய்ததற்கான உள்நோக்கத்தை அறிய தனிப்டையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கின் புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை விரைவில் கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  டி.கே. இராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

News source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD