snapdeal

Saturday, June 25, 2016

சுவாதி கொலை: சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை

சென்னைபெண் என்ஜினீயர் சுவாதி கொலை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை நடத்தினார்.கமிஷனர் அவசர ஆலோசனை சென்னை நகரில் அரங்கேறி வரும் தொடர் கொலை சம்பவங்களை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவரச ஆலோசனை நடத்தினார்.இதில், சென்னை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களையும் அழைத்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.அப்போது சென்னை நகரில் குற்ற சம்பவங்களை ஒடுக்குவதற்கு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளையும், மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்தும் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–சென்னை நகரில் நடந்துள்ள கொலை சம்பவங்களில் கூலிப்படைக்கு எந்தவித தொடர்பு இல்லை. சொந்த விறுப்பு, வெறுப்பு சம்பவங்களால் தான் கொலைகள் அரங்கேறி உள்ளன. கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இரவு ரோந்து தீவிரம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜீனியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெயில்வே போலீசாருக்கு உதவியாக சென்னை நகர போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளி விரைவில் சிக்குவான் என்ற நம்பிக்கை உள்ளது.சென்னை நகரில் குற்றச்செயல்களை முற்றிலும் ஒடுக்கும் வகையில் இரவு ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். சாலைகளில் மட்டுமின்றி சந்து, முடுக்குகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டவுடன், மதுகுடிப்பவர்கள் கலைந்து சென்று விட வேண்டும். கடையின் வெளியே கூட்டமாக நின்று பேசக் கூடாது. இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜி. வரதராஜீ உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் அருகில் இருந்தனர்.
news source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD