snapdeal

Sunday, June 12, 2016

இணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினியின் ‘கபாலி’ பட பாடல்கள் முன்கூட்டி வெளியானது; படக்குழுவினர் அதிர்ச்சி


சென்னை,

ரஜினிகாந்த்தின் ‘கபாலி’ பட பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக முன்கூட்டி வெளியானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கபாலி

ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் கபாலி. இதன் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் ராதிகா ஆப்தே, கலையரசன், கிஷோர், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தியை வைத்து மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை எடுத்து பிரபலமானவர்.

ரஞ்சித் சொன்ன கபாலி கதை பிடித்துப்போனதால் புதுமுக டைரக்டர் என்பதை பார்க்காமல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் உடனடியாக சம்மதித்தார். சென்னை, மலேசியா, பாங்காக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதன் டிரைலர் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. பாடல்கள்

இதைத்தொடர்ந்து கபாலி படத்தின் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் நெருப்புடா, உலகம் ஒருவனுக்கா, மாயநதி, வீரதுரந்தர, வானம் பார்த்தேன் ஆகிய 5 பாடல்கள் இடம்பெற்று உள்ளன. நெருப்புடா பாடலில் இடம்பெறும் வசனங்களை ரஜினிகாந்த்தே எழுதி இருப்பது சிறப்பு அம்சம். இந்த பாடல் கள் இன்று(12-ந்தேதி) இணையதளங்களில் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்து இருந்தார்.

ஆனால் இரண்டு நாட்கள் முன்னதாக நேற்று முன்தினம் நெருப்புடா பாடலில் 30 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலில் நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்.. முடியுமா, நடக்குமா.. போன்ற வார்த்தைகள் இடம்பெற்று இருந்தன. இவற்றை ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து கேட்டார்கள். ரஜினி வசனம்

தொடர்ந்து ரஜினி பேசும் ‘‘நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு. 25 வருசத்துக்கு முன்னாடி எப்டி போனானோ கபாலி. அப்டியே வந்துட்டேன்னு சொல்லு... கபாலிடா..’’ என்ற வசனங்களும் இணையதளத்தில் வெளியானது. யாரோ திருட்டுத்தனமாக இவற்றை வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாடல்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே அவற்றை இணையதளத்தில் பரவவிட்டது வருத்தம் அளிக்கிறது என்று அவர்கள் கூறினார்கள்.

படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில், ‘‘ஒரு பெரிய நடிகரின் பாடல்கள் வெளியீட்டுக்கு முன்பே கசிந்து இருக்கிறது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையாது’’ என்று கூறி இருக்கிறார்
news source dailythanthi 

No comments:

Post a Comment

FREE DOWNLOAD