snapdeal

Friday, December 2, 2016

சென்னையில் காற்றுடன் பலத்த மழை||Wind-and-heavy-rain-in-Chennai

சென்னையில் காற்றுடன் பலத்த மழை||Wind-and-heavy-rain-in-Chenna



சென்னை, 

புயல் வலுவிழந்து கரையை கடந்த போதி லும் மேக கூட்டம் திரள் வதால் அவ்வப்போது மழை பெய்கிறது.இதனால் தாழ் வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

நேற்று மாலை 4 மணியில் இருந்து மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது.இன்று காலை 6 மணி யில் இருந்து 8.30 மணி வரை விட்டு விட்டு மழை பெய்த தால் பள்ளி கல் லூரி செல்லும் மாணவ மாண விகள் பெரிதும் சிரமப் பட்டனர்.இலங்கைக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

பாரிமுனை, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர், ஆவடி, திருமுல்லை வாயல், புழல், புதூர், செங்குன்றம், மாதவரம், வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார்,கிண்டி, பல்லா வரம், குரோம் பேட்டை, தாம்பரம்,கூடுவாஞ்சேரி,பூவிருந்தவல்லி, போரூர், காட்டுப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக்கிடக்கிறது.

 காற்றுடன் மழை பெய்ததால் கீழ்ப்பாக்கத்தில் டெய்லர்ஸ் ரோடு, ஹாரிங் டன் ரோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரி கிரீம்ஸ் சாலை, முகப்பேர் ஏரித்திட்டபகுதி, முகப்பேர் மேற்கு, அம்பத் தூர், கோயம்பேடு, வட பழனி, கிண்டி, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் மரங்கள் விழுந்தன.  இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. தீயணைப்பு படைக்கு புகார் வந்த தும் விரைந்து சென்று விழுந்து கிடந்த மரங்களை அப்புறப் படுத்தினார்கள்.i





No comments:

Post a Comment

FREE DOWNLOAD