snapdeal

Saturday, December 3, 2016

‘கழுதைப் பால்’ சாக்லேட்!||Ass-milk-chocolate

‘கழுதைப் பால்’ சாக்லேட்!||Ass-milk-chocolate





ழுதைப் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்மூரில் பலர் நம்புகிறார்கள், பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் கழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் உள்ள யூரோலேக்டிக்ஸ் என்ற நிறுவனம்தான் கழுதைப் பால் சாக்லேட் தயாரிக்கப் போகிறது. பிரபல சாக்லேட் தயாரிப்பாளரான ஜெரார்டு போர்னெராடு உடன் இணைந்து அந்நிறுவனம் இப்புது முயற்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

யூரோலேக்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பீர்லுகி ஓர்னெசு, கடந்த 2014–ம் ஆண்டு கழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டை வாடிகன் நகருக்குச் சென்று போப் பிரான்சிசிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாராம்.

அதன் பிறகு, சுவிட்சர்லாந்தில் முதன்முதலாக கழுதைப் பால் சாக்லேட்களை தயாரித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஓர்னெசு திட்டமிட்டாராம். 

இதைத் தொடர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தின் மோர்ஜஸ் நகரில் முதன்முதலாக, கழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

பசும்பால் மூலம் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், கழுதைப் பால் மூலம் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை உண்ணலாம்.

மேலும், தாய்ப்பாலுக்கு அடுத்து விலங்குகள் பாலில் கழுதைப் பால்தான் சிறந்தது. ஏனெனில், பிற விலங்குகளின் பாலில் உள்ள கொழுப்பின் அளவை ஒப்பிடுகையில் கழுதைப் பாலில் கொழுப்பு மிகவும் குறைவு.

அதுமட்டுமில்லாமல், கழுதைப் பால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்ட சாக்லேட் நிறுவனம் கூறுகிறது.

வரலாற்றுக் காலத்தில் இருந்தே கழுதைப் பாலுக்குத் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. பேரழகி கிளியோபாட்ரா, தினமும் கழுதைப் பாலில் குளித்ததாகப் படித்திருக்கிறோம் அல்லவா?



No comments:

Post a Comment

FREE DOWNLOAD