snapdeal

Wednesday, November 30, 2016

சென்னை அருகே ‘நடா’ புயல் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை எச்சரிக்கை||Near-Chennai-Nada-storm-Across-Tamil-Nadu-Heavy-rain

சென்னை அருகே ‘நடா’ புயல் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை எச்சரிக்கை||Near-Chennai-Nada-storm-Across-Tamil-Nadu-Heavy-rain



சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறிய தாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.  அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அது மேலும் வலுவடைந்தது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘நடா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் சென்னைக்கு  தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
நாளை மறுநாள் (2-ந்தேதி) அதிகாலை சென்னைக்கும், வேதா ரண்யத்திற்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும்.

இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும். அதன் பிறகு மழை மேலும் அதிகரிக்கும்.2-ந்தேதி முதல் மழை அளவு மேலும் அதிகரிக்கும். அப்போது தமிழ்நாடு மற்றும் புதுவை முழுவதும் பலத்த மழை பெய்யும். அதன்பிறகு உள் மாவட்டங்களிலும் மேலும் பரவி அதிக அளவில் மழை கொட்டும். கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிகபலத்த மழை பெய்யும்.

புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் மழை கொட்டும். இதன் காரணமாக பாதிப்புகள் அதிகம் ஏற்படும். தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். கடல் அலைகள் ஆக்ரோச மாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த பின்பு 4-ந்தேதி வாக்கில் வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD