snapdeal

Wednesday, November 9, 2016

புதிய ரூபாய் நோட்டுக்காக அலைமோதிய மக்கள் கூட்டம் 2000 ரூபாய் மட்டுமே கிடைத்தது 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு

சென்னை


நாட்டில்   புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ. 1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போடவும், போலி ரூபாயான கள்ள நோட்டுகளை  கட்டுப்படுத்த வும்,   தீவிரவாதத்துக்கு இந்திய பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 பணத்தை மாற்றுவதற்கு பெரிய வேலைகள் ஒன்றுமில்லை. பணத்தை மாற்றுவதற்கான ஒரு படிவத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கொடுத்தால் போதும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அப்போது, அடையாள அட்டையை மறக்காமல் நீங்கள் கையில் எடுத்துச் செல்லுங்கள். அவ்வளவுதான்.

 புதிதாக வழங்கப்படும் படிவத்தில் உங்கள் பெயர், நீங்கள் கொண்டு செல்லும் அடையாள அட்டை குறித்த விவரங்கள், மாற்ற உள்ள 500 ரூபாய் தாள்கள் எத்தனை, 1000 ரூபாய் தாள்கள் எத்தனை, கையெழுத்து, இடம், தேதி ஆகியவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்தப் படிவங்களை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தலாம். மார்ச் 31ம் தேதி வரை அடையாள அட்டைகளுடன் சென்று பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனால் மார்ச் 31 வரை நமக்கு பழைய தாள்களை மாற்ற நாள் இருக்கிறது. கார்டுகள் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்வது, பொருட்களை வாங்குவது, காசோலைகள் கொடுப்பது, வரைவோலை கொடுப்பது, இண்டர்நெட் மூலமாக பணத்தை மாற்றுவது உள்ளிட்ட சேவைகளில் எவ்வித தடங்களும் இல்லை. அதனை எப்போதும் போல் செய்துக் கொள்ளலாம். 

தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கும் இந்த சேவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மையங்களில் இருந்து ஒரு கணக்காளர் எடுக்க முடியும். வங்கியில் சென்று பணம் எடுப்பவர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதுவும் வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

நேற்று வங்கி விடுமுறை விட்டு இன்று வங்கி திறக்கபட்டு உள்ளது, தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காக, நாடு முழுவதும் வங்கிகள் முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் புதிய நோட்டு வாங்கி திரும்பியவர்கள் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் வந்து உள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னுவரவில்லை என வங்கியில் கூறியதாக சொல்கிறார்கள். மேலும்  100 ரூபாய் புதிய நோட்டுகளும் வழங்கபடுவதாக கூறுகிறார்கள். 

சில வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு இன்னும் வந்துசேரவில்லை  மதியத்திற்குள் வந்து சேரும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

FREE DOWNLOAD