snapdeal

Thursday, October 27, 2016

கள்ள நோட்டுக்கள் புகார்: 500,1000 ரூபாய் தாள்களை நன்கு ஆய்வு செய்த பிறகே மக்கள் பெற வேண்டும்- ரிசர்வ் வங்கி




மும்பை,

கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் புழங்குவதால் கவலை அடைந்துள்ள ரிசர்வ் வங்கி. பொதுமக்கள் ரூ.500, 1000  நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்திய  ரூபாய் நோட்டுக்களை போலியாக புழக்கத்தில் விட முயற்சிக்கிறது. அதேபோல்,இந்தியாவிலும் சில சமூக விரோத கும்பல்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், வருத்தம் அடைந்துள்ள ரிசர்வ் வங்கி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வழக்கமான பணபரிவர்த்தனைகளில் பெரிய அளவிலான கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட  சமூக விரோத சக்திகள் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.  எனவே, மக்கள் ரூபாய் நோட்டுகளை தீவிர ஆய்வுக்கு பிறகே பொதுமக்கள் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது”என்று தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD