snapdeal

Wednesday, September 28, 2016

8 விதமான கேமராக்களை பயன்படுத்தி பெண்களிடம் காம லீலை காதல் மன்னன் ஷாம்


சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஷாம் என்ற சாமுவேல் என்ற வாலிபர் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். பெரிய இடத்து பையனான ஷாம் வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஷாமின் தந்தை கார் டீலராக உள்ளார். தாய் அழகு நிலையம் வைத்துள்ளார். மிகவும் செல்லமாக செல்வ செழிப்புடன் வளர்ந்த ஷாமுக்கு தந்தையின் தொழிலும் ஒரு வகையில் கெட்டுப்போவதற்கு காரணமாகவே அமைந்துவிட்டது என்றே கூறலாம். தந்தை கார் டீலர் என்பதால் விதம் விதமான சொகுசு கார்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. இந்த கார்களில் சுற்றி வந்தே ஷாம் இளம்பெண்களை வீழ்த்தி இருக்கிறார். சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஷியாமளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணையும் ஷாம் காதல் வலையில் வீழ்த்தினார். வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்று கூறி காதல் வசனங்களையும் பேசினார். 2 முறை அந்த பெண்ணுக்காக தற்கொலை செய்யவும் ஷாம் துணிந்துள்ளார். இதனால் மனம் மாறிய ஷியாமளா, ஷாமை காதலித்துள்ளார். இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். அப்போது ஷியாமளாவுடன் காதல் லீலையில் ஈடுபட்ட ஷாம் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை செல்போன் மூலமாக எடுத்து தள்ளி இருக்கிறார். இதுபற்றி தெரிய வந்ததும் ஷாமினால் ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர், போன் செய்து ஷியாமளாவை எச்சரித்துள்ளார். நீ பழகும் ஆள் எப்படி? அவன் யார்? என்று உனக்கு தெரியுமா? என எதிர்முனையில் பேசிய பெண், ஷாமை பற்றிய எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டிருக்கிறார். இதன் பிறகே ஷாமின் சுயரூபம், ஷியாமளாவுக்கு தெரிய வந்தது. அவரை விட்டு விலக தொடங்கினார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஷாம், ஷியாமளாவை மிரட்டி இருக்கிறார். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் அவ்வளவுதான்... உனது மானத்தை வாங்கி விடுவேன் என்று கூறிய ஷாம், நீ என்னோடு இருக்கும் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சசியை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஷாம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் 11 பெண்களுடன் ஷாம் காதல் லீலையில் ஈடுபட்டது அம்பலமானது. அவனது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில் இது உறுதிபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் பெண்களோடு ஷாம் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன. ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்கு முத்தக்காட்சிகளும், படுக்கை அறைகளில் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்களும் முகம் சுளிக்கும் வகையில் பதிவாகி இருக்கிறது. இவைகளையெல்லாம் போலீசார் பறிமுதல் செய்தனர். தனது வலையில் விழும் பெண்களை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று ஷாம் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது 8 விதமான கேமராக்களை பயன்படுத்தியும் ஷாம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை இளம் பெண்ணான ஷியாமளாவை மிரட்டியதால் போலீசில் சிக்கிய ஷாம் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒரு பெண், மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகள், வேலூரை சேர்ந்த ஒரு பெண் ஆகியோரும் ஷாமின் காதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பெண், ஷாம் மீது தெரிவித்துள்ள புகாரின் முழு விவரம் வருமாறு:- பி.பி.ஏ. பட்டதாரியான நான் ராயப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தேன். அப்பொழுது சாமுவேல் என்கிறவன் என்னை பின் தொடர்ந்து உன்னை காதலிக்கிறேன் என்று ஒரு மாதமாக தொந்தரவு செய்தான். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதற்கு அவன் பிளேடால் கையை கிழித்துக் கொண்டு நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று பயமுறுத்தி னான். அதை நான் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு மறுபடியும் சில நாட்கள் கழித்து இன்னொரு கையை கிழித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் என்று அவனுடைய நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள். நீ இல்லையென்றால் இறந்து விடுவேன் என்று ஷாம் சொல்கிறான். அவன் உன்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறான் என்றும் கூறினார்கள். அதன்பிறகு அவனுடைய விருப்பத்தை நான் ஏற்றுக்கொண்டேன். பல மாதங்களாக பழகினேன். அப்பொழுது அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனைப் பற்றி உனக்கு தெரியுமா அவன் ஏற்கனவே என்னை, எனக்கு முன்னால் பல பெண்களையும் காதலித்து ஏமாற்றி இருக்கிறான் என்று என்னிடம் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். மறுநாள் அவனுடைய மொபைல் போனை வாங்கி பார்த்தேன். ஆதலால் நான் அவள் சொன்னது உண்மையென்று அறிந்து அவனிடமிருந்து விலக ஆரம்பித்தேன். இதை தெரிந்தவுடன் அவன் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. திடீரென்று கடந்த வாரத்தில் வேறு ஒரு தொலைபேசியிலிருந்து என்னைத் தொடர்புக் கொண்டு பேச அழைத்தான். அதற்கு நான் மறுத்ததால் அதற்கு அவன் நான் அவனோடு நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப், பேஸ்புக்-ல் அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினான். 10 லட்சம் ரூபாய் கேட்டான். நான் கேட்ட ரூபாயை தரவில்லையென்றால் சுவாதியை கொலை செய்ததுபோல் உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். அதன்பின் உடனே என் தொலைபேசியை கட் பண்ணி விட்டேன். அதன்பிறகு பார்த்தால் அவன் உண்மையாகவே என்னிடம் பழகிய புகைப்படத்தையும் பல பெண்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் (வாட்ஸ்-அப் குரூப்பில்) பரவவிட்டான். இதை பார்த்த என் குடும்பத்தினரும், என் அம்மாவும் என்னை திட்டி அடித்தார்கள். அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். சாமுவேல் மீது தக்க நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

News source :dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD