snapdeal

Tuesday, June 21, 2016

இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன; பிரிட்டன் ஊடகம் ஆதாரத்துடன் தகவல் வெளியீடு .

லண்டன், இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கு ஆதாரங்களுடன் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 1 லட்சம்  அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அப்போதைய அதிபர் ராஜபக்சே விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டினார். இந்நிலையில் சர்வதேச அளவில் தடைவிதிக்கப்பட்ட  க்ளஸ்டர் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கு ஆதாரங்களுடன் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது வெளியாகி உள்ள இத்தகவல்கள் இலங்கை அரசுக்கு எதிரான தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பும், இலங்கை போரின் போது உயர்பதவி வகித்தவர்கள் இப்போதைய அரசில் இடம்பெற்று உள்ளதையும் தி கார்டியன் சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்து குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொத்து குண்டுகளின் 42 பாகங்கள் ஆனையிரவு, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை தி கார்டியன் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. மறுப்பு தெரிவித்து வரும் இலங்கை ராணுவத்திற்கு எதிரான ஆதாரமாக புகைப்படங்கள் அமைத்து உள்ளது.  இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது இப்போது இலங்கை அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனா பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சரத் பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்தார் என்றும் தி கார்டியன் சுட்டிக் காட்டிஉள்ளது. இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஹலோ டிரஸ்ட் என்ற அமைப்பு ஈடுபட்டு உள்ளது. அவ்வமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.  ரஷியாவில் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் வெடிக்காத கொத்து குண்டுகளின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 32-வது அமர்வு கடந்த வாரம் தொடங்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் போர் குற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பு ஏற்பு தொடர்பாக அந்நாட்டு அரசிடம் கேள்விக்கணைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பஉள்ளது. ஐ.நா. உரிமைகள் ஆணையம் மற்றும் பல்வேறு மனித உரிமைகள் ஆணையங்கள் போர்க்குற்றம் நடந்தது என்பதை கண்டுபிடித்து உள்ளன. ஆனால் இதுவரையில் இலங்கை அரசின் மூத்த உறுப்பினர்கள் அல்லது ராணுவ அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவில்லை.கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதை ராஜபக்சே அரசு மறுத்தது, சிறிசேனா அரசும் ராணுவம் சர்வதேச சட்டத்தை பின்பற்றியதாக கூறிவருகிறது. இப்போது கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான செய்தியை ஆதாரத்துடன் தி கார்டியன் வெளியிட்டு உள்ளது. இலங்கை போரின் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியிடம் கார்டியன் பேட்டி கண்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவர் புதுகுடியிருப்பு மருத்துவமனையில் கொத்து குண்டு வீசப்பட்டது என்று கூறிஉள்ளார். முக்கிய பிரமுகர்களிடமும் பேட்டிக் கண்டு அவர்களுடைய கருத்துக்களை தி கார்டியன் வெளியிட்டு உள்ளது. ஆனால் இதுதொடர்பான கட்டுரையை எழுதிய போது இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டதாகவும், அரசிடம் இருந்து உடனடியாக எந்தஒரு பதிலும் வரவில்லை என்றும் நாளிதழ் கூறிஉள்ளது.  தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் தி கார்டியனின் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

News source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD