snapdeal

Monday, May 30, 2016

ஓசூர் நில அளவையர் கொலை: தீக்காயங்களுடன் பிடிபட்டவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


ஓமலூர், ஓசூர் நில அளவையர் கொலை தொடர்பாக தீக்காயங்களுடன் பிடிபட்டவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நில அளவையர் கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள திரிவேணி கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் குவளை செழியன் (வயது 42). இவர் ஓசூர் நகராட்சியில் நில அளவையராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி ரேவதி. கடந்த 26–ந் தேதி குவளை செழியன், தனது சொகுசு காரில் வெளியே புறப்பட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் வேப்படியாறு பகுதியில் சாலையோரம் தீ வைக்கப்பட்ட காருக்குள் உடல் துண்டு துண்டாக எரிந்த நிலையில் குவளை செழியன் கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.தீக்காயங்களுடன் பிடிபட்டார் இதுபற்றி அறிந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள். அப்போது அந்த பகுதியில் இருந்த பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்தனர். அவரது கழுத்து, கைமணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீக்காயம் இருந்தது.பிடிபட்டவர் ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சக்திவேல்(36)ஆவார். அவரை பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை இதைத்தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் சக்திவேலுவை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சக்திவேல் தப்பி விடாமல் இருப்பதற்காக அவர் சிகிச்சை பெறும் வார்டை சுற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சாதாரண உடையில் 5 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் அடிக்கடி கலைவாணன் என்ற பெயரை கூறுகிறார். எனவே, நிலஅளவையர் குவளை செழியன் கொலையில் கலைவாணன் என்பவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சக்திவேல் சிகிச்சையில் இருப்பதால் வாக்குமூலம் வாங்கவில்லை என்றும், சிகிச்சை முடிந்த பின்னர்தான் அவரிடம் வாக்குமூலம் வாங்கப்படும் என்றும் தீவட்டிப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.இதனிடையே, குவளை செழியனின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD