snapdeal

Friday, January 6, 2017

திருப்பத்தூரில் பெண் போலீஸ் முகத்தில் ‘ஆசிட்’ வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது||Girl-in-TirupathurPolice-faceAcid-case-dropped--Also

திருப்பத்தூரில் பெண் போலீஸ் முகத்தில் ‘ஆசிட்’ வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது||Girl-in-TirupathurPolice-faceAcid-case-dropped--Also







திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள பீரான்லைனை சேர்ந்த டிரைவர் சுரேஷ். இவரது மனைவி லாவண்யா (வயது 27), திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 23–ந் தேதி இரவு லாவண்யா ஸ்கூட்டரில் வந்தார். தலைமை தபால் நிலையம் அருகில் வந்தபோது, மர்ம நபர்கள் திடீரென லாவண்யா மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் லாவண்யாவுக்கு முகம், கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பத்தூர் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரனிடம் வாங்கிய ரூ.28 லட்சத்தை லாவண்யா தர மறுத்ததால் கூலியாட்களை வைத்து லாவண்யா முகத்தில் பிரபாகரன் ஆசிட் வீசியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பத்தூர் டி.எம்.சி. தெருவை சேர்ந்த பாபு மகன் பசுபதியை (24) போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD