snapdeal

Wednesday, December 7, 2016

அப்பல்லோவில் நர்ஸ்களை ”கிங் காங்” என்று செல்லமாக அழைத்த ஜெயலலிதா||A-Jayalalithaa-who-joked-and-played-Apollo-Doctors

அப்பல்லோவில் நர்ஸ்களை ”கிங் காங்” என்று செல்லமாக அழைத்த ஜெயலலிதா||A-Jayalalithaa-who-joked-and-played-Apollo-Doctors





சென்னை, 

முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட போது கூட அவர் குண மாகி வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணம்தான் மக் கள் மனதில் நிலவியது. அதை உறுதிபடுத்துவது போல உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை காரணமாக அவர் உடல் நலம் தேறி வந்தார்.

அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு தோன்றிய நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்துள்ளார். ஒரே நாளில் எப்படி இந்த தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது என்பது அ.தி.மு.க.வினரிடம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.எப்படி இந்த சோக முடிவு ஏற்பட்டது? 2 நாட்களுக்குப் பிறகு தற்போது அது பற்றிய தகவல்கள் வெளியில் வந் துள்ளன.

செப்டம்பர் 22-ந்தேதி இரவு ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை பயப்படும்படியாக இருந்தது. என்றாலும் சென்னை அப் பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரை சற்று தேற வைத்தனர்.அவரது சுவாசம் சீரான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம், நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் வந்து சிகிச்சையை மேம்படுத் தினார்கள். இதனால் அவர் உடல் நலம் சிறப்பான முன் னேற்றத்தைப் பெற்றது.
இந்த நிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் பிசியோ தெரபிஸ்ட்கள் அளித்த சிகிச்சை ஜெயலலிதாவை நன்றாக குணம் அடைய செய்தது.

நவம்பர் 19-ந்தேதி ஜெயலலிதா தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நர்சுகளிடம் சிரித்து பேசும் அளவுக்கு நலம் பெற்றார்.
உப்புமா, பொங்கல் உணவு வகைகளை வழக்கம் போல சாப்பிடத் தொடங்கி இருந்தார். 

இவர் உடல்நலன் தேறி சிறப்பு பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அதாவது நவம்பர் 19ம் தேட்தி சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி உள்பட 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.

அப்போது நடந்தவற்றை உருக்கத்துடன் விவரிக்கின்றனர் செவிலியர்கள். உலகமே அவரை இரும்பு பெண்மணி என புகழாரம் சூட்டினர், அவரது பாசமான முகத்தை பார்த்ததாக தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மூன்று பேரையும் ”கிங் காங்” என்றே செல்லமாக அழைப்பாராம் ஜெயலலிதா.

உடல்நலம் தேறிய பின்னர் ஸ்பூனில் எடுத்து தானாகவே உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளார், தமக்குப் பிடித்தமான உப்புமா, பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளார்.

இந்த ஸ்பூன் உப்புமாவை நான் ஷீலாவுக்காக சாப்பிடுகிறேன், இந்த ஸ்பூனை சாமு-வுக்காக சாப்பிடுகிறேன் என பாசத்துடன் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

தினமும் ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஜெயலலிதா, தங்களுடன் சேர்ந்து பழைய பாடல்களை கேட்டு ரசிப்பார், மக்கள் பிராத்தனை செய்வதை பார்த்து நெகிழ்ந்து போவார் என கூறுகிறார் ரேணுகா.

பிசியோதெரபி சிகிச்சை அளித்த போது, எங்களுடன் பந்து விளையாடுவார் என கூறும் செவிலியர்கள், சிறிது நேரம் ஆனவுடன், நான் சோர்வாக இருக்கிறேன்; பின்னர் பயிற்சியைச் செய்யலாமா என கேட்பாராம்.

யாராவது அறைக்குள் வந்தால், புன்னகையுடன் தங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என கேட்பதாக கூறுகிறார் செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர் சுனிதா.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD