snapdeal

Saturday, December 10, 2016

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம் சோகத்தை பகிர்ந்து கொண்ட சசிகலா||jayalalithaa-lived-to-see-the-houseFormerly-bustling

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம் சோகத்தை பகிர்ந்து கொண்ட சசிகலா||jayalalithaa-lived-to-see-the-houseFormerly-bustling





சென்னை, 

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது.
தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி பொது மக்கள்  அவர் நல்லடக்கம் செய்யபட்ட எம்.ஜிஆர் நினைவிடத்தில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அதேபோல், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை காணவும் ஏராளமான பொது மக்களும், அ.தி.மு.க.வினரும் சாரை சாரையாக வருகிறார்கள்.ஜெயலலிதா  தனது தாயார்   சந்தியாவுடன் சேர்ந்து 1967-ம் ஆண்டு போயஸ்கார்டனில் உள்ள 81-ம் நம்பர் வீட்டை வாங்கி னார். அதற்கு அவர் ரூ.1.37 லட்சம் கொடுத்தார். 24 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களா வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ-. 90 கோடி ஆகும்.

ஜெயலலிதா அந்த வீட்டில் சுமார் 50 ஆண்டு கள் வாழ்ந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக சசிகலாவும் அந்த வீட்டில் ஜெயலலிதா வுடன் வசித்தார். தற்போது ஜெயலலிதா  மறைவுக்கு பிறகு சசிகலா அந்த வீட் டில் தொடர்ந்து வசித்து வரு கிறார்.இந்த வீட்டில்  கண்ணீருடன் வரும் அவர்கள் தங்கள் தலைவி வாழ்ந்த வீட்டை பார்த்து நெஞ்சுருகி செல்கின்றனர். பலர் தங்களது குடும்பம், குடும்பமாக வந்து செல்வதால் போயஸ் கார்டன் சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. 

ஜெயலலிதாவின் வீட்டை பார்க்க இன்றும் ஏராளமான் தொண்டர்கள் வந்தனர்.  அங்கு ஜெயலலிதா வீட்டிஅ பார்த்து கதறிஅழுத தொண்டர்களையும் மக்களையும் இன்று சசிகலா சந்தித்தார்.அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த நல்லகண்ணு மற்றும் முத்தரசன் ஆகியோர் போயஸ்கார்டன் வந்தனர். அங்கு சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினர்.



No comments:

Post a Comment

FREE DOWNLOAD