சென்னை,
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக 28, 29–ந் தேதிகளில் தமிழகத்தில் மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார்.
வட கிழக்கு பருவமழைதமிழகத்தில் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. தாமதமாகத்தொடங்கினாலும் போதிய மழையை தரவில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் வார்தா புயல் உருவாகி கடந்த 12–ந்தேதி சென்னையை தாக்கியது. இதில் ஓரளவு மழையை தமிழகத்தில் வட மாவட்டங்களில் கொடுத்தாலும் தமிழகத்தில் மழை குறைவாகத்தான் உள்ளது.
மழை காலம் முடிய இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. எனவே தாமதமாகவாவது மழை பெய்யுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது:–
28–ந்தேதி மழை பெய்யும்வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 28, 29–ந் தேதிகளில் மழை பெய்யும். மழை கனமழையாக இருக்காது. வட கிழக்கு பருவமழை முடியும் நேரமாக இருப்பதால் மழை போதிய அளவுக்கு பெய்யாது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
வட கிழக்கு பருவமழையின்போது வழக்கமாக தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் நேற்று வரை 62 சதவீதத்திற்கும் குறைவாகதான் மழை பெய்துள்ளது. சென்னையில் சராசரியாக 75 செ.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால் 34 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. அதாவது 55 சதவீதம் குறைவாகத்தான் பெய்துள்ளது. இவ்வாறு இயக்குனர் ஸ்டெல்லா தெரிவித்தார்.
No comments:
Post a Comment