snapdeal

Friday, December 9, 2016

சசிகலா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் 2-வது நாளாக ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இல்லை||In-the-2day-meeting

சசிகலா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் 2-வது நாளாக ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இல்லை||In-the-2day-meeting





சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்- அமைச்சருமாக இருந்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.

புதிய பொதுச் செயலாளர்

ஆனால், பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக சுமார் 30 ஆண்டுகளாக இருந்து வந்த சசிகலாதான் அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல் கசியத் தொடங்கி உள்ளது. விரைவில், கூடும் செயற்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

சசிகலாவுடன் சந்திப்பு

ஆனால், இப்போதே அதை உறுதி செய்யும் வகையில், சில நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. சசிகலா தற்போது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், அவரது ஆலோசனையை பெற்றுத்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், சசிகலாவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் பங்கேற்றார்.

2-வது நாளாக ஆலோசனை

இதேபோல், 2-வது நாளாக நேற்றும் சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, “எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை, ஒற்றுமையோடு இருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையோடு அம்மா (ஜெயலலிதா) விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என்று உறுதிபட கூறினர். அவர்களின் இந்த உறுதிமொழியை கேட்ட சசிகலா அவர்களை பாராட்டினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மு.தம்பிதுரையும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்குழு - பொதுக்குழு

தற்போது, சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 135 ஆக உள்ளது. இதில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் 40 பேர் இருக்கின்றனர். எனவே தான், கொங்கு மண்டல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா தலைமையில் நடைபெறும் கூட்டங்களில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் வேட்பாளர் யார்?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். ஏற்கனவே, ஆர்.கே.நகர் தொகுதி கடந்த 1½ ஆண்டுகளில் 2 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. தற்போது மூன்றாவதாக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்றும் அக்கட்சியில் இப்போதே பேசப்பட்டு வருகிறது. அனேகமாக, சசிகலாவே அங்கு வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

போலீஸ் கமிஷனர்

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், சசிகலா மற்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் நேற்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD