Friday, November 18, 2016

முதியோர்களுக்கு மட்டும் நாளை வங்கியில் பணம் விநியோகம் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் ரிஷி அறிவிப்பு||Banks-tomorrow-wont-be-doing-exchange-of-notes-at

முதியோர்களுக்கு மட்டும் நாளை வங்கியில் பணம் விநியோகம் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் ரிஷி அறிவிப்பு||Banks-tomorrow-wont-be-doing-exchange-of-notes-at




புதுடெல்லி,

ரூ.500, ரூ.1000 நோட்டு களை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அந்த நோட்டுகளை வங்கி களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் நாடெங்கும் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பழைய ரூ.500, ரூ.1000 கொடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.100 நோட்டுகளை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியன் வங்கி சங்கத்தின் தலைவர் ராஜீவ் ரிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை நாளை வங்கிகளில் மாற்ற முடியாது. முதியோர்களுக்கு மட்டுமே நாளை பழைய நோட்டுக்கு மாற்றித்தரப்படும். நாளை வங்கிகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே முதியோருக்கு ரூபாய் நோட்டுகள் மாற்றித்தரப்படும். மற்றும் வங்கி பணப்பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க வேண்டும் என்பதால் பழைய நோட்டுகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.  செல்லாத ரூ.500 மற்றும் ரூ,1,000-த்தை மாற்றுவதற்காக வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்ததை தொடர்ந்து வங்கிகள் கூட்டம் கனிசமாக குறைந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment