Wednesday, November 16, 2016

ரூ 500, ரூ -1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றம் புதிய சட்டம் மத்திய அரசு முடிவு


புதுடெல்லி,

500,1000 ரூபாய் நோட்டு களுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி யில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள்.

டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய பெஞ் சில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறும் போது, மத்திய அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். கடந்த 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைவிதிக்கப்பட்ட பின்னர்  வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர்  முதல் வகுப்பில் விமான டிக்கட்டுகளை  பதிவு செய்துள்ளனர். அதனையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள புதியசட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1- ந் தேதிக்கு பிறகு தண்டனைக்கு ரிய குற்றமாக கருதப்படும்.  இது அதிக அளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

news source :dailythanthi


No comments:

Post a Comment