snapdeal

Wednesday, November 30, 2016

சென்னையில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் ’நாடா’ புயல் மையம்; வட மாவட்டங்களில் மழை||Cyclone-Nada-likely-to-cross-Tamil-Nadu-coast-on-Friday

சென்னையில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் ’நாடா’ புயல் மையம்; வட மாவட்டங்களில் மழை||Cyclone-Nada-likely-to-cross-Tamil-Nadu-coast-on-Friday





சென்னை, 

சென்னையில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் ’நாடா’ புயல் மையம் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தென்கிழக்கே 1,070 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது. ‘நாடா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை காலை கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி-வேதாரண்யம் இடையே புயல், நாளை கரையை கடக்கிறது. 

புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.  புயல், மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. நாடா புயல் சின்னம் அறிகுறியாக கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளது. 

வட மாவட்டங்களில் மழை 

நாடா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி மாநில அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மழையின் வேகம் அங்கு அதிகரித்து உள்ளது. புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 


No comments:

Post a Comment

FREE DOWNLOAD