snapdeal

Monday, July 18, 2016

தியேட்டர்களில் கபாலி டிக்கெட் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது .

‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்த நிலையில் கபாலி திரையிடும் தியேட் டர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. வெள்ளி, சனி, ஞாயிறு விடு முறை நாட்கள் என்பதாலும், ரஜினியின் ‘கபாலி’ படம் பற்றிய எதிர் பார்ப்பு அதிகமாக இருப்ப தாலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து விட்டதாக தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் ‘ஆன்லைன்’ மூலம் ‘கபாலி’ டிக்கெட் விற்று தீர்ந்ததால், அன்று நேரில் தியேட்டருக்கு முன்பதிவு செய்ய சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 3 நாட்களுக்கான டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். எப்படியும் முன்பதிவிலேயே ரூ 40 கோடியை கபாலி தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கபாலி உலக தமிழகர்களே எதிர்ப்பார்க்கும் ஒரு படம். இப்படம் உலகம் முழுக்க ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்நாடு- ரூ 68 கோடி ஆந்திரா+தெலுங்கானா- ரூ 32 கோடி கேரளா- ரூ 7.5 கோடி கர்நாடகா- ரூ 10 கோடி வட இந்தியா- ரூ 15.5 கோடி அமெரிக்கா மற்றும் கனடா- ரூ 8.5 கோடி மற்ற நாடுகள்- ரூ 16.5 கோடி சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் மியூஸில் ரைட்ஸ்- ரூ 40 கோடி மற்றவை- ரூ 10-15 கோடி மொத்தம் வியாபாரம் மட்டுமே கபாலி ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது, இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD