snapdeal

Monday, September 21, 2015

ஆலய விழாவில் திருநங்கையரின் ஆபாச நடனம்: தடுத்த போலீசாரை அடித்து, உதைத்த கிராம மக்கள்

ஐதராபாத், செப்.22-

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருநங்கையரை வைத்து நடத்தப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சியை தடுக்க வந்த போலீசாரை கிராம மக்கள் அடித்து, உதைத்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசார் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பிரகாசம் மாவட்டத்துக்குட்பட்ட பாகாலா பல்லப்பாளேம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவில் திருநங்கையரை வைத்து படுஆபாசமாக நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சிங்கராய கொண்டா பகுதி போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை அந்த கிராமத்துக்கு விரைந்த போலீசார், மேடையில் நடந்து கொண்டிருந்த ஆபாச நடனத்தை நிறுத்துமாறு விழாக் குழுவினரிடம் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த ‘ரசிகர்கள்’ போலீசாருடன் தகராறு செய்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த பாகாலா பல்லப்பாளேம் கிராம மக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசார் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு தலைமை காவலரின் மண்டை பிளந்தது. போலீசார் சென்ற ஜீப்பையும் அவர்கள் கற்களால் அடித்து, சேதப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை படம் பிடிக்க முயன்ற பத்திரிகை நிருபர்களையும் தடுத்து, நிறுத்தியதுடன் அவர்களை சிறைபிடித்தும் வைத்துக் கொண்டனர். இச்சம்பவத்தையடுத்து, அங்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பாகாலா பல்லப்பாளேம் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

news source:maalaimalar


shop on

No comments:

Post a Comment

FREE DOWNLOAD